வியாழன், 17 ஜனவரி, 2013

kanavu

                                                               கனவு 
கனவு இந்த மந்திர  வார்த்தைக்குத்தான் எவ்வளவு கண்ணியம் நம் உலகத்தில் அம்மம்மா அப்துல் கலாமில் இருந்து அடிமட்ட ஆள் வரை.ஆனால் இந்த கனவை கண்டுவிட்டு நாம் படும் அவஸ்தை இருக்கே.  சொல்றேன் கனவை காணும் பாக்கியத்தை கொடுத்த இறைவன் அதை  சரி செய்யவில்லை என்றால் நாம் படும் பாட்டை குறைக்க ஒரு வழி சொல்லி இருக்கலாம் .என்  அப்துல் கலாமையே எடுத்துக்குவோம் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் என்று சொல்றாரே அந்த  கனவு பலிக்கவில்லை என்றால் நாம் படும்  இன்னல் அவருக்கு என்ன தெரியும் .பிள்ளை   கூடவே இருக்க வேண்டும் என்பது தாயின் கனவு.தன் கணவன் தன் பேச்சை மட்டும் தான் கேக்கவேண்டும்  என்பது மனைவியின் கனவு .தனக்கு பிடிச்சதேல்லாம் வாங்கிகுடுக்கவேண்டும் என்பது பிள்ளையின் கனவு. நமக்கு ஏதாவது செய்யமாட்டானா  என்பது கூட பிறந்தவர்களின்  கனவு. இதில் நாம் எங்கு நமது கனவை காண்பது. திரு அப்துல் கலாம் அவர்களே .நாங்கள் அப்படி கனவு காண்பதையும் கண்ணியமே இல்லாமல் கலைக்கத்தான் கடைதெருவில் எத்துனை இன்னல்கள் அய்யா பில்லைகளிக்கு  கனவுகான கத்து கொடுக்கும்போதே அது கலைந்தால் எப்படி எடுத்துகொள்வது  என்றும் சொல்லி கொடுத்தீர்களானால் எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தார் மகிழ்ச்சி அடைவோம்.
                                                       "நன்றி"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக