ஞாயிறு, 31 ஜூலை, 2016

எனக்கு இன்று பிறந்த நாள் .நான் எல்லா பிறந்த நாளையும் போலத்தான் இந்த நாளும் இருக்கும் என்று இருந்தேன் ஆனால் என்னை திக்கு முக்காட செய்த என் அம்மு செல்லத்தை நான் என்ன சொல்ல .நான் என் பிறந்த நாளை இவ்வளவு சந்தோசமாக கொண்டாடியது இல்லை .ஏன்  பல தடவை நான் பிறந்த நாளை கொண்டாடியது கூட இல்லை .ஆனால் இன்று நான் எல்லாவற்றுக்கும் ஒன்றாக என் சந்தோசமான பிறந்த நாளை கொண்டாட செய்த இறைவனுக்கும் .என் அம்முக்கும் மற்றும் எனக்கு மறக்காமல் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் முக்கியமாக நாங்கள் பெற்ற பிள்ளைகள் ஷீபா  மற்றும் ஆரிப்  இருவருக்கும் இவை அனைத்தையும் எனக்கு அளித்த அந்த இறைவனுக்கும் நன்றி நன்றி
அன்புடன் அக்பர் 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

ரொம்ப நாளைக்கு அப்பறோம் எழுதுறேன் இடையில் என் வேலைகள் ஒருவேளை என்னை தின்று விட்டதென் ட்ரே தொன்றுகிரது .என்ன செய்ய பாரதியை போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று என்னை போல். சாதரணமானவர்கள் சொல்ல முடிவதில்லை 

திங்கள், 1 டிசம்பர், 2014

இது எனது தொலைபேசியில் இருந்து எழுதிய பதிவு

சனி, 22 நவம்பர், 2014

என்னால் விட்டு சென்ற இந்த  நிரப்ப எனக்கு
ஒரு  பட்டு இருக்கிறது  இந்த ஒரு   எத்தனை  எத்தனை மாற்றங்கள் .நான்  என்னை புரிந்து கொள்ள இந்த ஓருடம் என்னவோ எனக்கு துனையகதான் இருந்தது அப்பப்ப்பா எதனை மனிதர்கள் அவர்களுக்குள்  ளவுக்கு எதனை விதமான கெட்ட சிந்தனைகள் இனால் ஜீரநிக்ககூட  முடிவதில்லை சில் நேரங்களில் கேட்ட விஷயம்  மக்களிடம்  சேருகிறதோ   விஷயங்கள் போய் சேருவது இல்லை என்ன செய்ய கடவுள்    ஊருக்கு ஒன்று தானே வைத்து இருகின்றான்  எழுதும் நேரம் கலை சரியாக 2:35 இருக்கலாம் 

வியாழன், 31 ஜனவரி, 2013

NATPU

                                       நட்பு 

முன்னுரை 
நான் இந்த பகுதியை என் நண்பனுகாகவே எழுதுகின்றேன் 
இதை எல்லாரும் படித்து பாராட்டுவதை விட என் நண்பன் படித்தால் போதும் எனக்கு 

நண்பா உன்னை பிரியும் சந்தர்பத்தை விட
         என் உயிர் பிரியும் சந்தர்பத்தை எனக்கு தா 
                                                                                 
                                                                                   ....அக்பர்
என்னடா எவன பாத்தாலும் நட்பு நட்புன்க்ரானுங்க என்ன பெரிய நட்புன்னு கேக்காதிங்க என் நட்பு எனக்கு பெரியதுதான் 

என் நன்பன உங்களுக்கு அறிமுகம் செய்ய போறேன் 
அவன் ரொம்ம்ப்ப நல்லவன் அவன் வாழ்க்கைய விட என் வாழ்க்கைமேல அக்கறை வச்சு இருக்கான் எங்கயோ ஒரு மூலைல 
வெங்காயம் வெங்காயம்னு கூவிக்கிட்டு இருந்த என்ன இன்னக்கு நான் கூப்பிட்ட 40 பேர் வர மாதிரி வச்சு இருக்கான் இறைவா அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்த அது என் நண்பனுக்கு நண்பனா பிறக்கணும் .
அவன நினைச்சா எனக்கு 


எவ்வளவு பெருமையா இருக்கு 
இறைவா என் நன்பன தண்ட உனக்கு நான் எத்துனை ஜென்மம் எடுத்தாலும் நன்றி சொல்லிகிட்டே இருப்பேன் 

ஒவ்வொரு மனிதனும் தாய் வயிற்றில் பிரப்பான்  என்றால் நான் என் 
நண்பன்  கண்ணிமயில்  பிறந்தேன் 

நான் உன்ன நினைக்கையில் என் ம சு ரொம்ப பின்னாடி போகுது 

இருந்தாலும் விவரம் தெரிங்கடுல இருந்து சொல்றேன் கண்ண  மூடுறேன்  
ஹ்ம்ம் அந்த வீடு இன்னும் கட்டல பாதியா நிக்குது இல்லல்ல இனிக்குது
நானும் நீயும் மணிக்கணக்கா  உக்காந்து பேசுறோம் எல்லாம் கேக்குறாங்க அப்டி என்னதான் பேசுவிங்கலோன்னு. ஆனா மச்சான் நமக்கு இன்னும் பேசத்தான் எவ்வளவோ இருக்கு  வேணாம் வேணாம் நான் கதையா மாத்துறேன் 


எத நினைக்க 

மார்கெட்டுல காய்கறி வாங்குறப்ப நீ  என்ன திட்டுனதுல இருந்து நீயும் நானும் ஒவ்வரு விசயத்துக்கும் சண்டை போட்ட  வரைக்கும் .   

ஒரு பெண்ணை மச்சான்னு கூப்பிடுரதுல எனக்கு  என்னக்கும் வெக்கம் வந்தது இல்ல 
ஒரு ஆணை மச்சின்னு கூப்பிடுறதில உனக்கும்  வெக்கம் வந்தது இல்ல 

நாமதான் ஒருதற்கு ஒருத்தர் போட்டி போட்டு பிரியாம இருந்து இருக்கோமே 

நாம ஓட்டாத  ஆள் நம் வீதியில் உண்டா அதெல்லாம் நான் இப்போ நினச்சாலும் அம்மம்மா என்ன சுகம் 

நீயும் நானும் அண்ணனும்  நம் ஸ்ரீரங்கம் அடயவளைங்கான் வீதியில் கையில் எடாவடு தீனி வாங்கி வச்சுக்கிட்டு என்னென்னமோ பேசிகிட்டு நடந்த அந்த காலம் இனி வரேவே வராதாடா ?

நீ என் வாழ்கையை பத்தி கவலைபட்டது என்ன எப்படியாவது நல்ல நிலைமையில்  கொண்டு வந்துரணும்னு 

பட்ட கஷ்ட்டம் அப்பப்பா என் வேதன என்ன பெத்த தாய்க்கு கூட தெரியாதப்ப 

உனுக்கு மட்டும் எப்படித்தான் தெரயுமோ அல்லாக்கு தான் தெரியும் 

ஆனா மச்சான் இங்க நான் எவ்வளவோ வகையான சாப்பாடெல்லாம்  சாப்பிட்டுட்டேன்  ஆனால் என் பசி அறிந்து  வீட்டுல இருக்குற பழைய சோர 
கொஞ்சமா தயிர் ஊத்தி 
உன்கையலையே  குடுப்பியே அந்த ருசி உலகத்துல எங்க  போனாலும் 

கிடைக்காது கிடைக்காது கிடைக்காது

இனி கிடைக்குமான்னு நினைக்கிறப்ப கண்ணுல தண்ணிய தவிர என் மனச

சொல்ல எனக்கு வேற  வார்த்தை கிடக்கல



ஆனா ஒன்னுடா  நான்  நான் எங்கல்லாம் சுத்தினாலும்  அங்க நீ இருப்ப என் மச்சான் இருப்பன்ற தைய்ரியம் இருக்கும்

அந்த நினைப்புல நான் பல மாசம் கூட உன்கிட்ட போன்  பன்னாம  இருந்து இருக்கேன்

ஆனால் நீ இல்லாம நான் அங்க வந்து நான் எங்க போவேன்  என் வீட்டுக்கு எத்தன  பேர்  இருந்தாலும்  என் லக்ஷ்மி நீ இல்லாம

திருச்சி எனக்கு திருச்சியா இருக்காது


அதா நினைகிரப்பவே என் கண் கலங்குதே  நான் உன்ன அனுப்பிட்டு என்ன செய்ய  போறேன்


ஆனாலும் ஒரு சந்தோஷம் என் பிரெண்டு  கேனடா போனா சந்தொசமசப்  படுவானு நினைக்கிரப்ப  என் துக்கம் எல்லாம் போயிருது

டேய் போதுண்டா  விசயத்துக்கு வா

மச்சான் உனக்கு நல்லா  ஞாபகம் இருக்கா
நம்ம சின்னம்மான்னு ஒருத்தவங்க நம்பள சொன்னங்க எப்படியாவது  கல்யாணத்துக்கு பிறகு நாம்பளுக்குள்ள பிரச்னை வரும்னு


நாம அப்பா சொன்னோம் எனக்கு இன்னும் நல்லா  ஞாபகம் இருக்கு  நாங்க ரெண்டு பேரும் கடைசிவரை இப்படிதான் இருப்போம்னு

இறைவன் கருணையாள நம்மை கடைசிவரை ஆண்டவன் இப்படியே வச்சு இருக்கணும்



சரி சரி நான் கதையை ஆரம்பிகின்றேன்



அது ஒரு மார்கழி மாதம் காலை  வானம் அழுவாத வேண்டாமா என்பது போல  தன கண்ணீரை  கர்பப்பையில் தளும்ப  தளும்ப காத்திருந்தது .பூமி எங்கும் காலை பனி படிந்து வேண்டாம்  கொட்டி விடாதே என் குழந்தைகள் துள்ளி விளையாடும் நேரம் இது என்று வானத்தை நோக்கி கை ஏந்தி கொண்டு இருந்தது .நாம் பார்க்கும்  இருவரும் வானத்தை பார்க்கும் நிலையிலும் இல்லை.பூமியை பார்க்கும் நிலையிலும் இல்லை அவர்கள் இருவர் நினைவிலும் ஒருவருக்குள் ஒருவரே .இந்த உலகில்  உள்ள யாரையும்  பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை .அன்பு ,பண்பு ,பாசம் ,நேசம் ,கொடுக்கல், வாங்கல்.போன்ற எதுவும் அவர்கள் இடையில் இல்லை .

ஆமாம்   அனைத்தும் இல்லை என்றால் அவர்களை நாம் எப்படி மனிதர்கள் கணக்கில் சேர்ப்பது .ஆம் அவர்களிடம் நட்பு இருந்தது ஹா நட்பு  வார்த்தையை சொல்லும்போதே அவர்கள் மனதி தான் எத்துனை சந்தோஷம் ?

நமது  நினைவிலும் அது  போலவே தான் தோன்றுகிறது .

முன்னூறு ரோஜாக்கள் ஒரே நேரத்தில் பூத்தது போல்

மல்லிகை தோட்டத்தில்  உள்ள அத்துணை பூக்களும் ஒரே சமயத்தில் பூத்தால் கூட இவ்வவளவு மனம் வருமோ என்று தெரியாது என்ன சொல்ல நான். சரி நாம் அவர்களை தொடர்வோம் .
 

அந்த இருவரும்  பற்றி

ஒரு ஆண்  ,ஒரு பெண்
ஆண் :   அஜய்

  பெண்:  சபீனா
இவர்களை பற்றி நாம் சொல்லவேண்டும் என்றால் நாம் காலத்தை  கொஞ்சம் கட்டாயம் பின் நோக்கி திருப்பி போடா வேண்டும்



                                                      அது ஒரு கிராமம்
அப்போது மழை காலம் பூக்களுக்கும் பஞ்சமில்லை புன்னகைக்கும் பஞ்சமில்லை என்பதுபோல நம் வாண்டுகள் இருவரும் வீதி உலா வரும் அழகை  பார்க்க கதிரவன் கூட காத்திருப்பன் அந்த வீதியில்.ஊர் அனைத்தும் சொந்தங்களை  இவர்கள் இருவரையும் தன பிள்ளைகளாய் பாவிக்கும் .தனக்கு மூன்று பிள்ளைகள் இருந்தாலும் இந்த இருவரும் வீதியில் நடந்தால் கொண்டாட்டமே.

இவ்வளவு காலையில் இவர் இருவரும் எங்கே செல்கின்றனர் 





























வியாழன், 17 ஜனவரி, 2013

kanavu

                                                               கனவு 
கனவு இந்த மந்திர  வார்த்தைக்குத்தான் எவ்வளவு கண்ணியம் நம் உலகத்தில் அம்மம்மா அப்துல் கலாமில் இருந்து அடிமட்ட ஆள் வரை.ஆனால் இந்த கனவை கண்டுவிட்டு நாம் படும் அவஸ்தை இருக்கே.  சொல்றேன் கனவை காணும் பாக்கியத்தை கொடுத்த இறைவன் அதை  சரி செய்யவில்லை என்றால் நாம் படும் பாட்டை குறைக்க ஒரு வழி சொல்லி இருக்கலாம் .என்  அப்துல் கலாமையே எடுத்துக்குவோம் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் என்று சொல்றாரே அந்த  கனவு பலிக்கவில்லை என்றால் நாம் படும்  இன்னல் அவருக்கு என்ன தெரியும் .பிள்ளை   கூடவே இருக்க வேண்டும் என்பது தாயின் கனவு.தன் கணவன் தன் பேச்சை மட்டும் தான் கேக்கவேண்டும்  என்பது மனைவியின் கனவு .தனக்கு பிடிச்சதேல்லாம் வாங்கிகுடுக்கவேண்டும் என்பது பிள்ளையின் கனவு. நமக்கு ஏதாவது செய்யமாட்டானா  என்பது கூட பிறந்தவர்களின்  கனவு. இதில் நாம் எங்கு நமது கனவை காண்பது. திரு அப்துல் கலாம் அவர்களே .நாங்கள் அப்படி கனவு காண்பதையும் கண்ணியமே இல்லாமல் கலைக்கத்தான் கடைதெருவில் எத்துனை இன்னல்கள் அய்யா பில்லைகளிக்கு  கனவுகான கத்து கொடுக்கும்போதே அது கலைந்தால் எப்படி எடுத்துகொள்வது  என்றும் சொல்லி கொடுத்தீர்களானால் எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தார் மகிழ்ச்சி அடைவோம்.
                                                       "நன்றி"

சனி, 12 ஜனவரி, 2013

இன்று என் கல்யாண நாள் நான் மிகவும் சந்தோசமாக அனுபவிக்கும்  நாள்

பிள்ளை பேரு என்பது எப்படி பெண்களுக்கு இரண்டாம் பிறப்போ. அது போல கல்யாணம்  என்பது ஆண்களுக்கு இரண்டாம் பிறப்பு. அதில் தப்பித்தவன் கொடுத்து வைத்தவன்இதை  நான் எனது முதல் கல்யாண நாளில் சொல்ல வில்லைஇது  எனக்கு நான்காம் கல்யாண நாள் நான் என் வாழ்கையில் அனுபவித்து எழுதுகிறேன் .இன்ஷா அல்லா இடை போலவே என் வாழ்க்கை முழுவதும் அமைய வேண்டும் என்று வேண்டி கொள்கின்றேன்,